News March 20, 2024
ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தமிழகத்தில் அக்கட்சி புதிய அணியை கட்டமைத்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 21, 2025
நடிகர் அஸ்ரானி காலமானார்.. குவியும் இரங்கல்

பாலிவுட் <<18059439>>நடிகர் அஸ்ரானி<<>> மரணமடைந்த செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அவரின் மரணத்தை மேனேஜர் பாபு பாய் 3 மணியளவில் அறிவித்தார். அதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான், அஸ்ரானி இன்ஸ்டாவில், ‘Happy Diwali’ என வாழ்த்தி இருந்தார். இவரின் மறைவுக்கு நடிகர் அக்சய் குமார், கிரிக்கெட்டர் ஷிகர் தவான், MH மாநில CM பட்னாவிஸ் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 21, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. நல்ல நேரம் இதுதான்

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு வேகமாக வளரும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். விடுமுறை தினமான இன்று மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில் மட்டும் இயங்கும் பங்குச்சந்தையில், உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். நாளையும் (அக்.22) பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை இயங்கும்.
News October 21, 2025
காய்ச்சலை விரட்ட இந்த கசாயத்தை குடிங்க!

மழைக்காலம் வந்தாலே வயது வித்தியாசமின்றி, பலரையும் காய்ச்சல் வாட்டி வதைக்கிறது. அதிலிருந்து நிவாரணம் பெற, இந்த கசாயத்தை குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டினால் கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதில் தேன் சேர்த்து காலை, மாலை, இரவு என காய்ச்சல் குணமாகும்வரை குடிக்கலாம்.