News March 22, 2024
நாதக-வுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சின்னம் இல்லாமல் நாதக பரப்புரையில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் அரிக்கேன் விளக்கு, மைக் உள்ளிட்ட சின்னங்களை நாதக கேட்ட நிலையில், மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
Similar News
News February 4, 2026
திமுக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க: ஆதவ் அர்ஜுனா

கரூரில் தனியார் TV செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஒருவாரமாக இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க திருச்சி MP துரை வைகோவும் வலியுறுத்தியிருந்தார்.
News February 4, 2026
கூட்டணியால் காங்., பலவீனம்: பிரவீன்

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 12% வாக்கு வங்கி இருக்கிறது; ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் பலவீனமாகி வருவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, உ.பி., பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்., பலவீனமாகி வருகிறது என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துவிட்டது; கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸின் உண்மையான பலமே வேறு எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
15 நாட்களில் 509 பெண்கள் மிஸ்ஸிங்!

தலைநகர் டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் & சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி போலீஸ் தரவுகளின்படி, 509 பெண்கள் உள்பட மொத்தம் 807 பேர் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை 235 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் மாயமாகியுள்ளனர்.


