News March 30, 2024

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

image

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகிய 3 சின்னங்களை விருப்ப சின்னங்களாக ஓபிஎஸ் கேட்டிருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

இரவு உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க!

image

காலை உணவு எவ்வளவு முக்கியமோ, இரவு உணவும் உடலுக்கு அவ்வளவு முக்கியம். எனவே, இரவில் இந்த தவறுகளை பண்ணாதீங்க என கூறுகின்றனர் டாக்டர்கள். *கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் அதிகம் உள்ள தோசை, அரிசி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை தவிர்க்கவும் *பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிட வேண்டாம் *முக்கியமாக தாமதமாக உணவருந்தக் கூடாது *இந்த தவறுகளை செய்தால் BP, சுகர், கொலஸ்ட்ரால், பருமன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்.

News January 20, 2026

வங்கி கணக்கில் ₹4,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. <>www.dge.tn.gov.in<<>> இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் விவரங்களில் திருத்தம் இருந்தால், dgedsection@gmail.com என்ற மெயிலுக்கு ஜன.27-க்குள் தெரிவிக்க வேண்டும். இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். SHARE IT.

News January 20, 2026

ICC அழுத்தம் கொடுத்தால் ஏற்கமாட்டோம்: வங்கதேச அரசு

image

BCCI அழுத்தத்திற்கு ICC பணிந்து, தங்கள் மீது நியாயமற்ற அழுத்தம் கொடுத்தால், அதனை ஏற்கமாட்டோம் என வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகரான ஆசிஃப் கூறியுள்ளார். IND-BAN இடையேயான அரசியல் பதட்டத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி டி20 WC தொடரில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ICC-யிடம் வங்கதேசம் கோரியது. நாளையுடன் இதற்கான கெடு முடியும் நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!