News March 21, 2024
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக-விற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த தொகுதி என்பது உறுதி செய்யப்படவில்லை. தற்போது குக்கர் சின்னம் கிடைத்துள்ளதால், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
Similar News
News November 17, 2025
பிஹாரில் ஆதிக்கம் செலுத்தும் பெண் MLA-க்கள்

பிஹாரில் பெண் MLA-க்கள் ஆதிக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 26 பெண்கள் வெற்றிபெற்ற நிலையில், தற்போது 29-ஆக உயர்ந்துள்ளது. இதில், 26 பேர் NDA கூட்டணியை சேர்ந்தவர்கள். கடந்த முறை குற்றப் பின்னணி கொண்ட MLA-க்களின் எண்ணிக்கை 163-ஆக இருந்த நிலையில், இது இந்த முறை 130-ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பட்டதாரிகள் எண்ணிக்கை 149-லிருந்து 147-ஆக குறைந்துள்ளது.
News November 17, 2025
ஐயப்ப பக்தர்களுக்கு ₹500-ல் ஆன்மிக சுற்றுலா

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஆரியங்காவு, அச்சன்கோயில், பந்தளம், குளத்துப்புழை, குருவாயூர் உள்ளிட்ட 72 ஆன்மிக தலங்களை இணைக்கும் படியான சுற்றுலா திட்டத்தை KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபருக்கு ₹500 – ₹700 வரை மட்டுமே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பத்தனம்திட்டா, பம்பை பஸ் ஸ்டாண்ட்களில் பெறலாம்.
News November 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

வாரத்தின் முதல் நாளான இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹92,320-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை மொத்தம் ₹2,880 குறைந்துள்ளது.


