News March 30, 2024

விசிகவுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு

image

மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமாருக்கும் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

திருப்பத்தூர்: பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக பாட்டிக்கு விபூதி!

image

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி வசந்தா (66), கட்டிட தொழிலாளி. இவரது பேரன் பிரசாந்த் (20) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவர் 5 பவுன் நகையை வசந்தாவிடம் பெற்றுக்கொண்டு டிமிக்கி காட்டியுள்ளார். புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.

News November 28, 2025

தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

image

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துவிட்டு, Manager (HR) Apprentice, Bharat Dynamics Limited, Kanchanbagh, Hyderabad, 500058 என்ற முகவரிக்கு அப்ளிகேஷனை அனுப்ப வேண்டும்.

News November 28, 2025

லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

image

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?

error: Content is protected !!