News August 5, 2025
கூட்டணி கட்சியினர் PM மோடிக்கு பாராட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்காக PM மோடிக்கு கூட்டணி கட்சி MP-க்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக துணிவுடன் போராடிய முப்படைக்கும் கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News August 5, 2025
SK-க்கு வில்லனாக நடிக்க அழைப்பு: லோகேஷ்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க தன்னை அணுகியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு அக்கதை பிடித்திருந்ததாகவும், SK-வும், தான் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எனினும் கூலி படத்தில் பிஸியாக இருந்ததால் அதனை நிராகரித்ததாக தெரிவித்த லோகேஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
News August 5, 2025
GOOD BYE அம்மா.. உருக்கமான தற்கொலை கடிதம்

‘அன்புள்ள குடும்பத்தினரே, இதை படிக்கும்போது அழ வேண்டாம். நான் ஏற்கனவே சொர்க்கம் சென்றிருப்பேன். உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுகிறேன். GOOD BYE அம்மா.’ படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் இந்த வரிகள் 14 வயதேயான சிறுவனின் தற்கொலை கடிதத்தில் இருந்தவை. பெங்களூருவில் 7-வது படிக்கும் சிறுவன், தனது அம்மா வெளியூர் சென்ற நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 5, 2025
ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமா

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை தடுக்க உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்தாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தவில்லை என்றார். மாநில அரசுகளுக்கு இச்சட்டத்தை இயற்ற அதிகாரமுள்ளதால் TN அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இதனை இயற்ற கோரிக்கை விடுத்தார்.