News October 8, 2025
விஜய்யுடன் கூட்டணியா? வெளியான ரகசியம்

கரூர் துயர சம்பவம் விஜய்க்கு தற்காலிக பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் பெரிய கட்சிகளுடன் (ADMK, BJP) கூட்டணி செல்ல வாய்ப்பில்லை. அப்படி நடந்தால் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என அவருக்கு நன்றாக தெரியும். தற்போது TTV, ‘யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமையும்’ என சொல்வதன் பின்னணியில், TVK-வுடன் கூட்டணி அமைப்பதற்கான கணக்கு இருப்பதாக கூறுகின்றனர்.
Similar News
News October 8, 2025
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தஷ்வந்தின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. குற்றத்தை உறுதிசெய்ய போலீஸ் போதுமான ஆவணங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டதாக கூறி, தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, தஷ்வந்தை விடுதலையும் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டிற்கு அருகே வசித்த 6 வயது சிறுமியை, தஷ்வந்த் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
News October 8, 2025
ரோஹித் சர்மாவை அவமதித்த BCCI: மனோஜ் திவாரி

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ODI கேப்டன் பொறுப்பை கில்லிடம் வழங்கியது சர்ச்சையானது. இந்நிலையில், தலைவர் பதவியை பறித்து ரோஹித் சர்மாவை BCCI அவமதித்துள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக ரோகித் நிறைய விஷயங்களை செய்திருப்பதாகவும், அவரை தலைமை பதவியில் இருந்து தூக்க எந்த உருப்படியான காரணமும் இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News October 8, 2025
BREAKING: அதிரடியாக நீக்கினார் ஸ்டாலின்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த கார்த்திக்-ஐ அதிரடியாக நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லை கிழக்கு திமுக பொறுப்பாளராக இருந்த கிரகாம்பெல் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அரூர் தொகுதி பழனியப்பனிடம் இருந்து ஆ.மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுகவில் பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.