News August 7, 2025
விஜய்யுடன் கூட்டணி? பிரேமலதா சூசகம்

அரசியலுக்கு வந்தபிறகும் செந்தூரபாண்டியின் (விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக் கொள்கிறார். குறிப்பாக கேப்டனின் போட்டோக்களை தவெகவினர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான், தற்போதைக்கு விஜயகாந்த் போட்டோக்களை பயன்படுத்த வேண்டாம்; கூட்டணிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என நேற்று பிரேமலதா கூறினார். இது, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான மறைமுகமாக சமிக்ஞை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 7, 2025
SPORTS ROUND UP: ரோஹித்தான் பெஸ்ட் கேப்டன்!

◆ரோஹித் தான் பெஸ்ட் IPL கேப்டன் என நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
சின்சினாட்டி (அமெரிக்கா) ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது
◆தீ விபத்தால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது
◆காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் டாம் லாதம் விலகியுள்ளார்.
News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
News August 7, 2025
மனித குலத்தின் இருண்ட நாள்!

1945 ஆகஸ்ட் 6.. மனித இனத்தின் இருண்ட நாள். ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெரும் சத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாம்பலாகின. இதில் உயிரிழந்தோரை விட, உயிரோடு இருந்தவர்களின் வேதனையே பெரிது. அந்த துயரமும், கொடூரமும் யாரும் மன்னிக்கவே முடியாத ஒரு மனிதப்பிழை. இந்த நாளில் மனதில் எழும் ஒரே கேள்வி, இந்த கொடுமையை பார்த்த பிறகும், உலகம் இன்னும் போருக்கு ஏன் ஆயத்தமாகவே இருக்கிறது?