News October 13, 2025
விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் தடாலடி

தவெக கூட்டணிக்கு வந்தால், பாஜகவை அதிமுக கழற்றிவிடுமா, விஜய்யுடன் பேசினீர்களா என EPS-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அதிமுக – தவெக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பு தெரியவரும் என EPS பதிலளித்தார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் பேசவில்லை என்றும், ராமதாஸ் உடன் என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஜயகாந்த் இல்லத்தை தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கும், கவர்னர் மாளிகைக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே, CM, EPS, விஜய் மற்றும் நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை புதிய RECORD.. இதுவே முதல்முறை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.13) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,525-க்கும், சவரன் ₹92,200-க்கும் விற்பனையாகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
News October 13, 2025
No Bra Day: பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்?

உடல் பருமன், உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு அதிகமாக ‘மார்பக புற்றுநோய்’ ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று (அக்.13) ‘No Bra Day’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் என்ன, தவறான முறையில் Bra அணியாமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.