News June 28, 2024
விஜய்யுடன் கூட்டணி: சீமான் சூசகம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் கட்சியுடன் இணைந்து நாதக போட்டியிட வாய்ப்புள்ளதாக சீமான் சூசகமாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை பாராட்டியுள்ள அவர், போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து விஜய் பேசியது கவனத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் சீமான் கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2026
ஹோட்டல் பணிப்பெண் தவறாக நடந்த பாகிஸ்தான் வீரர்!

PAK கிரிக்கெட் வீரர் ஒருவர் மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கையின் கண்டி பகுதியில் T20I WC-க்காக தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், ஹோட்டல் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. அச்சத்தில் அப்பெண் கத்தி கூச்சலிட்டதில், ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டதாக கூறப்படுகிறது. அந்த வீரர் சார்பில் அவரது மேனஜர் மன்னிப்பு கேட்டாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
சற்றுமுன்: நடிகை லதா அதிமுகவில் இணைந்தார்

பிரபல நடிகை லதா, EPS முன்னிலையில் சற்றுமுன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் கட்சித் தொடங்கிய போதே 3-வது பெண் உறுப்பினராக அதிமுகவில் இணைந்தவர். ஜெ., மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக உடைந்தபோது, கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவரை, வரும் தேர்தலில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது..
News March 5, 2026
பிஹார் அடுத்த CM யார்? பட்டியல் இதோ

பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியதை அடுத்து யார் அடுத்த CM என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் CM-க்கான உத்தேச பட்டியலில் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா, சாம்ராட் சௌதரி, அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால், அமைச்சர் நித்யானந்த் ராய், MLA சஞ்சீவ் சௌராசியா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் துணை முதல்வராக தேர்வு செய்யப்படலாம் எனவும் பேசப்படுகிறது.


