News October 31, 2025
திமுகவுடன் கூட்டணி… அரசியலில் புதிய பரபரப்பு

அன்புமணிக்கு பதிலாக பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட தன் மகள் ஸ்ரீகாந்தியை, 2026 தேர்தலில் தருமபுரியில் களமிறக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் உத்தரவின்பேரில், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஜி.கே.மணி தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்து, 5 MLA-க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்.
Similar News
News October 31, 2025
சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறை…

Hit படங்களும், ஸ்டார் படங்களும் பல மொழிகளில் வெளியாவது வழக்கம். ஆனால், மராத்தி சினிமாவில் இந்த வழக்கம் கிடையாது. இங்கு ப்ளாக்பஸ்டர்கள் அபூர்வம். ஆனால் சமீபத்தில் வெளியான ‘தசாவதார்’ படம், பிளாக்பஸ்டராக மாறியது. தற்போது இந்த படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு, நவ.21-ல் கேரள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. மராத்தி சினிமா வரலாற்றில் ஒரு படம் வேறு மொழிக்கு டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை.
News October 31, 2025
பிஹாரிகளை ஏளனம் செய்யும் திமுக: அண்ணாமலை

பிஹாரிகளுக்கும் தமிழர்களுக்கும் PM மோடி பகையை உண்டாக்குவதாக CM ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM கூறியது உண்மை என்ற அவர், அமைச்சர்கள் கூட பிஹாரிகளை ஏளனமாக பேசியதை தமிழக மக்கள் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், அரசு துறையில் ஊழல் நடந்திருப்பதை மடைமாற்றவே CM, PM-ஐ விமர்சிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
News October 31, 2025
சற்றுமுன்: லெஜண்ட் காலமானார்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் (கோல்கீப்பர்) மானுவல் ஃபிரடெரிக் (78) காலமானார். உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த ஃபிரடெரிக், 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவர்தான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கேரள மாநிலத்தவர். 2019-ம் ஆண்டு, விளையாட்டுக்கான அவரது பங்களிப்புக்காக தியான் சந்த் ( Dhyan Chand) Award வழங்கப்பட்டது.


