News August 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2026 தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வகையில், திண்டுக்கல்லில் நேற்று இரவு ஜான் பாண்டியனின் தமமுக சார்பில் ‘சமூக சமத்துவ மாநாடு’ நடந்தது. இதில், அதிமுக மூத்த தலைவர்கள், நயினார், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் திமுகவை விமர்சித்த ஜான் பாண்டியன், அதிமுக கூட்டணியில் தமமுக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். மேலும், 2026-ல் தென் மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.
Similar News
News August 25, 2025
BREAKING: தமிழக ஆசிரியர்களுக்கு நற்செய்தி

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.
News August 25, 2025
ஊடகத்துறையில் சாதிக்க விருப்பமா?

சென்னை கோட்டூர்புரத்தில், அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, டிவி, ரேடியோ, டிஜிட்டல் சார்ந்த ஊடக படிப்புகள் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. விடுதி வசதியும் உள்ளது. கல்விக்கட்டணம் ₹10,000 ஆகும். செய்முறை பயிற்சிக்கான ஸ்டுடியோக்களும் உள்ளன. நடப்பு ஆண்டு முதலே படிப்புகள் தொடங்கியுள்ளன. ஆண்டுக்கு 40 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படுகிறது.
News August 25, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும் அது 2 நாள்களில் வலுப்பெறும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஆக.31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் ஒரு வாரத்திற்கு குடையை மறக்க வேண்டாம்..!