News September 9, 2025

கூட்டணி பிரச்னைகள் தீரும்: தமிழிசை நம்பிக்கை

image

செங்கோட்டையனால் அதிமுகவில் மீண்டும் உள்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதில், அதன் கூட்டணி கட்சியான பாஜக தரப்போ, அது உள்கட்சி பிரச்னை என்று கூறியே ஒதுங்குகிறது. அத்துடன், கூட்டணியை சரியாக கையாளவில்லை என TTV சாடியதும் மீண்டும் கூட்டணிக்குள் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 2026 தேர்தலுக்குள் கூட்டணியில் நிலவும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News September 9, 2025

15-வது துணை ஜனாதிபதி, 17-வது தேர்தல்: ஏன் தெரியுமா?

image

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், 2 பேர் தலா 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 1952 – 1962, முகமது ஹமீது அன்சாரி: 2007 – 2017 என பதவி வகித்துள்ளனர். எனவேதான், இது 17-வது தேர்தலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போதைய தேர்தலில் CP ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.

News September 9, 2025

பற்றி ஏரியும் நேபாளத்தின் பதறவைக்கும் போட்டோஸ்!

image

இமயமலை அடிவார நாடான நேபாளம் தற்போது பற்றி எரிந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் வெகுண்டெழுந்து விட்டனர். இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் பிரதமர், மந்திரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பற்றி ஏரியும் நாட்டின் பதைபதைக்கும் போட்டோஸை Swipe செய்து பார்க்கவும்.

News September 9, 2025

VP Election: திருமா, கனிமொழி, இளையராஜா வாக்களிப்பு

image

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக MP-க்களான திருமாவளவன், கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது வாக்கினை செலுத்தினர். அதேபோல், நியமன MP ஆன இளையராஜாவும் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக, PM மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

error: Content is protected !!