News August 13, 2024
BJP தலைமையை ADMK ஏற்றால் கூட்டணி: அண்ணாமலை

பாஜகவின் தலைமையை ஏற்க அதிமுக முன்வந்தால் கூட்டணியை பற்றி யோசிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக வாங்கும் இடத்தில் இல்லை என்றும், கொடுக்கும் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் மிக பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் கூறினார்.
Similar News
News March 13, 2026
காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவரது மனைவி ஜமீலா, தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News March 13, 2026
சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
News March 13, 2026
MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.


