News October 6, 2025

விஜய்யால் மாறும் கூட்டணி கணக்குகள் (2/2)

image

விஜய்யை NDA நெருங்குகிறது என்ற ஊகம் கூட்டணி கணக்குகளை மாற்றியுள்ளது. EPS பிடிவாதத்தால் NDA–வில் இருந்து வெளியேறிய TTV, விஜய்யை ஒரு ஆப்ஷனாக முன்னிறுத்தி, பாஜகவிடம் தன் பேர வலிமையை காட்டினார். தற்போது, விஜய்க்கு ஆதரவாக NDA-வில் நடக்கும் நகர்வுகள், TTV–க்கான டிமாண்டை குறைத்துள்ளன. இதனால் தனித்து விடப்படுவோமோ என்ற எச்சரிக்கையால், பரம எதிரி திமுக பக்கம் பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 7, 2025

இந்தியர்களை கோபம் கொள்ள செய்துள்ளது: PM மோடி

image

CJI BR கவாய் மீதான தாக்குதல் முயற்சி, ஒட்டு மொத்த இந்தியர்களையும் கோபம் கொள்ளச் செய்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் இந்திய சமூகத்தில் இடமில்லை எனவும், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இது போன்ற சூழலில் CJI-யின் செயல்பாடுகள் வரவேற்கதக்கது எனவும், இது அரசியலமைப்பின் மீதான அவரது ஈடுபாட்டை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் கீர்த்தி..!

image

கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது, தனித்துவமான முகபாவனைக்கே, தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மகாநதியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார். ‘ரகு தாத்தா’ படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது, கீர்த்தி SM-யில் பதிவிட்டுள்ள போட்டோஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தா லைக் போடுங்க.

News October 6, 2025

புதிய முடிவெடுத்தார் விஜய்

image

பரப்புரை வியூகத்தை மாற்ற விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 2016 தேர்தலில் ஜெயலலிதா மண்டல வாரியாக பரப்புரை மேற்கொண்டதைபோல், விஜய் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளாராம். மாவட்ட தலைநகரங்களின் புறநகர் பகுதிகளில் விஜய் நிற்பதற்கு மட்டும் ஒரு மேடை அமைத்து அதில் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!