News March 23, 2024
பாஜக மிரட்டி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

ED மற்றும் IT ரெய்டு நடைபெற்ற 41 நிறுவனங்களிடம் இருந்து பாஜக ரூ.2,471 கோடியை நன்கொடையாக பெற்றிருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு நன்கொடையளித்த 33 நிறுவனங்களுக்கு மத்திய அரசின் 172 ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News November 19, 2025
முதல் வீரராக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அனைத்து Full Members அணிகளுக்கு எதிராக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், ODI போட்டிகளில் 19 சதங்கள் அடித்தும் புதிய மைல்கல்லை எட்டினார் ஹோப். ஆப்கன், ஆஸி, வ.தேசம், இங்கி., இந்தியா, அயர்லாந்து, நியூஸி., பாக்., தெ.ஆ., ஸ்ரீலங்கா, ஜிம்பாப்வே, வெ.இண்டீஸ் ஆகிய அணிகள் தான் Full Members அணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
News November 19, 2025
மெட்ரோ விவகாரம்: INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி, தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தரப்பு விமர்சித்துள்ளது. இதனை கண்டித்து நாளை (நவ.20) கோவையிலும், நவ.21-ல் மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் INDIA கூட்டணி கட்சியினர் அனைவரும் திரளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
பிஹாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ? PM

பிஹாரின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பிஹார் அரசியல் களம் வேறு, தமிழக அரசியல் களம் வேறு, மோடி அலை இங்கு வீசாது என்று திமுக & அதன் கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், கோவை விழாவிற்கு வருகை தந்த மோடிக்கு, விவசாயிகள் பச்சை துண்டை சுழற்றி வரவேற்பு அளித்தனர். இதனால் பிஹாரின் காற்று இங்கும் வீசுகிறதோ என தோன்றியதாக மோடி பேசினார்.


