News June 15, 2024
அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்: ஈவிகேஎஸ்

விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்ற அவர், பாஜகவின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது என்றார். தமிழிசையை பொது இடத்தில் அமித் ஷா அவமதித்ததை ஏற்க முடியாது, இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News March 1, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!
News March 1, 2026
டி20 WC டாஸ்: இந்தியா பவுலிங்

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை விளையாடிய அதே அணியுடன் இந்தியா மீண்டும் களமிறங்குகிறது.
News March 1, 2026
‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.


