News August 19, 2024

அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கம்

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்தன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் நிலையத்தில் பணிகள் நிறைவு பெற்றதால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று(ஆக.,19) முதல் சென்னை எழும்பூர் வரை வழக்கம்போல் செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Similar News

News March 12, 2026

நெல்லை: 74 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.

News March 12, 2026

தொழில் பங்கீட்டாளர் இணையதள போர்டல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

News March 12, 2026

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

திருநெல்வேலி, கண்டியப்பேரி அரசு மருத்துவமனை மேலப்பாளையம் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் சுகாதார வசதிகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். காலை உணவுத் திட்ட பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!