News May 15, 2024
இந்த வேலையெல்லாம் கேரளாவில் எடுபடாது!

பிராமண சமூகத்தை இழுவுபடுத்தும் வகையில் ‘புழு’ (2022 வெளியான) படத்தில் மம்மூட்டி நடித்திருந்ததாகக் கூறி சிலர் திடீரென சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். இஸ்லாமியர் முகமது குட்டி என்ற ஹேஷ்டேக்குடன் மம்மூட்டிக்கு எதிராக சிலர் பதிவிட்டனர். இதற்கு எதிர்வினையாக மம்முக்கா ஹேஷ்டேக்குடன் ‘மதவெறுப்பை ஏற்படுத்தும் வேலை கேரளாவில் எடுபடாது’ என்று ஆதரவாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
பாலாடை தேகத்தால் உருக வைக்கும் தமன்னா

தமிழ், தெலுங்கு ரசிகர்களை தனது பேரழகால் மயக்கி முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இப்போதும் வெப் சீரிஸ், படங்கள் என பிஸியாகவே உள்ள அவர், தன்னை டிரெண்டிங்கில் வைத்துக்கொள்ள தவறுவதில்லை. அப்படி இன்ஸ்டாவில் வித்தியாசமான ஆடையில், அவர் பகிர்ந்து போட்டோஸ் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது என்னடா டிரஸ் என சிலர் கலாய்த்தாலும், தமன்னா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹார்டின்களை பறக்கவிடுகின்றனர்.
News November 21, 2025
விஜய் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசுகிறார்: வைகோ

அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என விஜய் பேசி வருவது ஒருபோதும் நடக்காது என வைகோ தெரிவித்தார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, சென்னைக்கு அழைத்து சந்தித்தது அவரின் பொறுப்பற்ற செயல் எனவும் சாடினார். அவர் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசி வருவதாகவும், CM ஸ்டாலினை Uncle என சொல்வதெல்லாம் தெனாவட்டு என்றும் விமர்சித்துள்ளார்.
News November 21, 2025
7 தங்க பதக்கத்தை வென்ற இந்திய சிங்கப் பெண்கள்

உலகக் கோப்பை குத்துச்சண்டையில் நேற்று ஒரேநாளில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 48 கிலோ(KG) பிரிவில் மீனாட்சி, 54KG-ல் பிரீத்தி, 70KG-ல் பிரிவில் அருந்ததி சவுத்ரி, 80KG-ல் நுபுர், 51KG-ல் ஜதுமணி, 65KG-ல் அபினாஷ் ஜம்வால். 80KG-ல் அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கத்தை முத்தமிட்டனர். மற்றொரு இந்தியா வீராங்கனை ஹிதேஷ், கஜகஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.


