News October 17, 2025
இனி புது வீடு கட்ட இதெல்லாம் கட்டாயம்

பொது கட்டட விதிகளில் சில திருத்தங்கள் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில், 2 கார் மற்றும் 2 பைக் நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
நாட்டில் தலித்தாக இருப்பது குற்றமா? ராகுல் காந்தி

உ.பி.யில் சமீபத்தில் திருடன் என நினைத்து ஹரிஓம் வால்மீகி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நாட்டில் தலித்தாக இருப்பது பெரும் குற்றமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, மனநலம் பாதிக்கப்பட்ட ஹரிஓம், உயிரிழக்கும் தருவாயில் ‘ராகுல் காந்தி என்னை காப்பாற்றுங்கள்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
News October 18, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.
News October 18, 2025
ஹிட்மேன் ஃபிட்மேன் ஆனார்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முழு உடற்தகுதியுடன் ரோஹித் ஷர்மா தயாராகி உள்ளார். இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை அணிந்து அவர் எடுத்த புதிய போட்டோ வைரலாகி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்த ரோஹித் ஷர்மாவா இப்படி ஆளே மாறிட்டார் என நெட்டிசன்கள் கூறும் அளவிற்கு ஃபிட்டாக வந்துள்ளார். இதை சுட்டிகாட்டி ஆஸி.,க்கு சம்பவம் உறுதி என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.