News October 6, 2025
இதெல்லாம் அந்த காலம்.. தெரியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை கேட்டால் வாயை பிளந்துடுவீங்க. ‘என்ன சொல்றீங்க’ அப்படிங்குற மாதிரி இருக்கும். எந்த பொருள்கள், எந்த காலத்தில், எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ‘இதை நான் நினைத்தே பார்க்கல’ அப்படினு தோன்ற பொருள் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 6, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தனர்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இபிஎஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டபோது, 100-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை, கட்சி துண்டு அணிவித்து இபிஎஸ் வரவேற்றார். இதில், தருமபுரி திமுக மாவட்ட நிர்வாகிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 6, 2025
பயிற்சியை தொடங்கிய ஹிட்மேன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா பயிற்சியை தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடரில் அவர் இடம்பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மையத்தில் (CoE) அவர் தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 10 வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல், ஜிம்மிலும் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
News October 6, 2025
விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுக்காது: திருமாவளவன்

எந்த ஒரு தலைவரும், கரூர் துயரம் போல நடக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது கிடையாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பாஜக தலையிட்டு உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.