News October 25, 2025

இதெல்லாம் இந்தியா தந்த பரிசு

image

பண்டைய கால இந்திய கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் சில கண்டுபிடிப்புகள், உலகளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளவை. இதேபோன்று, வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 25, 2025

காந்திமதி நியமனம்: அன்புமணி ரியாக்‌ஷன்

image

பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்தார் ராமதாஸ். இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, உள்கட்சி விவகாரம் குறித்து தன்னால் இப்போது பேச முடியாது என கோபத்துடன் பதிலளித்தார். அன்புமணியுடன் இருப்பவர்கள் பாமகவின் அணியே அல்ல, அது ஒரு குழு தான் என்று ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இருதரப்பும் முரண்டு பிடித்துவரும் நிலையில், காந்திமதியின் நியமனம் கட்சியில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

News October 25, 2025

இதனால் இந்தியாவிற்கு அவப்பெயர்: BCCI

image

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

News October 25, 2025

திங்கள்கிழமை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

image

மருது பாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி அக்.27, 30-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி அக்.27-ல் <<18094912>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!