News March 25, 2024

இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை

image

அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய MI அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் கொஞ்சம் தடுமாறினோம். இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறினார்.

Similar News

News January 19, 2026

விஜய்யை பார்த்து எவ்வளவு பயம்: புகழேந்தி

image

EPS துரோகி என்ற பட்டம் பெற்றதால் மக்கள் அவரை ஏற்கவில்லை என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பலமிழந்து விட்டதாக கூறிய அவர், தற்போது களத்தில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றார். மேலும், ஜனநாயகனுக்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய்யை பார்த்து எவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், இப்படத்தை வைத்து அரசியல் சூழ்ச்சி நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

image

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

News January 19, 2026

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!