News October 27, 2024
All The Best செல்லம்

தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘உங்களது புதிய பயணத்திற்கு All The Best செல்லம்’ என குறிப்பிட்டு விஜய் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 14, 2026
₹10,000 கோடியில் தமிழில் AI: அமைச்சர் TRB ராஜா

தமிழில் இயங்கும் AI மென்பொருளை உருவாக்க சர்வம் AI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்த ₹10,000 கோடி முதலீடு 1,000 பேருக்கு உயர் தொழில்நுட்ப வேலை வாய்ப்பை உருவாக்கும். உலகத்திற்கான தயாரிப்பை தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதன்மூலம், சங்க காலத்திற்கு பிறகு டிஜிட்டல் சங்க காலத்தை உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
12 தொகுதிகளை கேட்டு ஷாக் கொடுக்கும் ஜி.கே.வாசன்!

தனது ராஜ்யசபா MP பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாநில அரசியலில் கவனம் ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளாராம். அதனால், NDA கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு EPS-க்கு ஜி.கே.வாசன் ஷாக் கொடுத்துள்ளதாக தமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு பின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை தயார் செய்ய உள்ளதாகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 14, மார்கழி 30 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


