News April 21, 2024
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்.13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாளை (ஏப்.22) மற்றும் நாளை மறுநாள் (ஏப்.23) ஆகிய தேதிகளில் விடுப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை தொடர்கிறது.
Similar News
News January 31, 2026
தேர்தலில் போட்டி.. குஷ்பு அறிவித்தார்

தலைமை அறிவித்தால் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும், பாஜக மாநில து. தலைவருமான குஷ்பு அறிவித்துள்ளார். முன்னதாக, 2021 தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு 29.29% வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். 2021 தேர்தலின்போதே சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குஷ்பு குறி வைத்திருந்தார். ஆனால், இறுதியில் அது கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
13 பேரை சுடும்போது EPS நேரில் சென்றாரா? KAS

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்க விஜய் நேரில் செல்லவில்லை என EPS வைத்த விமர்சனத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், 13 பேரை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது, அப்போதைய CM EPS நேரில் சென்றாரா என KAS கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஒரு அதிமுக அமைச்சர்கூட நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் சாடியுள்ளார்.
News January 31, 2026
பெரும் கஷ்டத்தை போக்கும் அற்புத மூலிகை

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்னை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.


