News April 7, 2024
அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4.5 கோடியை நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்துச் சென்றதை சுட்டிக்காட்டி, அவர் இந்த மனுவை வழங்கியுள்ளார்.
Similar News
News July 6, 2025
ஆட்டம் ஆரம்பித்ததும் அதகளம் காட்டிய ஆகாஷ்

இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாக 80 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆகாஷ் தீப் பந்தில் ஓல்லி போப் (24 ரன்கள்) & ஹாரி புரூக் (23 ரன்கள்) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதுவரை 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கி., அணி, இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இதில் 4 விக்கெட்டுகளை ஆகாஷே எடுத்துள்ளார்.
News July 6, 2025
தெய்வத்திருமகள் சியான் பொண்ணா இவுங்க…

இன்று வெளியான ‘துராந்தர்’ என்னும் பாலிவுட் படத்தில் டீசரில் இருப்பது யார் என தெரிகிறதா? ரன்வீர் சிங்குடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் இந்த பெண் தான் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சியான் விக்ரமின் மகளாக நடித்தவர். அன்று சுட்டிக் குழந்தையாக ரசிகர்களை ஈர்த்த சாரா அர்ஜூன், தற்போது 20 வயதில் சாரா பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்க இருக்கிறார். தமிழிலும் ஹீரோயினாக யாராவது புக் பண்ணுவாங்களா?
News July 6, 2025
ICUவில் அஜித் குமார் தம்பி… அடுத்தடுத்து திருப்பம்

போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸ் தாக்கியதில் தனது கால் பாதங்களில் வலி ஏற்பட்டிருப்பதாக நவீன் கூறியதால் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருப்பதாக அவரது தாய் மாமா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனை போலீஸ் விசாரிக்கும்போது தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறி இருந்தார்.