News February 25, 2025
மார்ச் 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்: CM ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முறையால் தமிழகத்தில் 8 எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து விவாதிக்க மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். TN மிகப் பெரிய உரிமை போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது என்றார்.
Similar News
News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
News February 25, 2025
Delimitation: தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

லோக் சபாவுக்கான தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆனால், 1967 வரை அது 41 தொகுதிகளாக இருந்தது. பின்னர், மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்ததால், தமிழகத்தில் 39ஆக குறைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
News February 25, 2025
லாலு பிரசாத், மகன், மகளுக்கு கோர்ட் சம்மன்

முறைகேடு வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகள் ஹேமா யாதவுக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அமைச்சராக 2004-2009 வரை லாலு பிரசாத் பதவி வகித்தபோது, ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக வரும் மார்ச் 11ஆம் தேதி லாலு பிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது.