News January 30, 2025
டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் PM மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31 – பிப்.13 மற்றும் மார்ச் 10 – ஏப்.4 வரை என 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
Similar News
News August 31, 2025
பொது அறிவு விநாடி வினா பதில்கள்

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17570500>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆந்திரப் பிரதேசம் (அக்டோபர் 1, 1953)
2. Kentucky Fried Chicken.
3. 4 அறைகள்.
4. தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம்.
5. முத்தையா முரளிதரன் (800 விக்கெட்கள்).
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க.
News August 31, 2025
நாளை முதல் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இனி டீ – ₹15, பால் – ₹15, லெமன் டீ – ₹15, காபி, ஸ்பெஷல் டீ – ₹20, ராகி மால்ட் – ₹20, சுக்கு காபி – ₹20, பூஸ்ட் – ₹25, ஹார்லிக்ஸ் – ₹25 என பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விரைவில் டீ, காபி விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
News August 31, 2025
பிஹார் போல் கோட்டை விட கூடாது: KN நேரு

வாக்காளர் பட்டியலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என DMK நிர்வாகிகளுக்கு KN நேரு அறிவுறுத்தியுள்ளார். பிஹார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது எனவும் ஒன்றிய செயலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.