News October 22, 2025

ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

image

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.

Similar News

News October 22, 2025

3 சிறப்பு ரயில்கள் ரத்து

image

குறைவான முன்பதிவு காரணமாக 3 சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை இயங்க உள்ள சென்ட்ரல் – கோட்டயம் – சென்ட்ரல் ரயில் (Train No:06121/06122), அக்.24, 26 தேதிகளில் இயங்கவுள்ள செங்கல்பட்டு – நெல்லை – செங்கல்பட்டு ரயில் (Train No:06153/06154), அக்.28, 29 தேதிகளில் இயங்கவுள்ள நாகர்கோவில் – சென்ட்ரல் – நாகர்கோவில் (Train No:06054/06053) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 22, 2025

FLASH: டியூட் படத்துக்கு வந்த சிக்கல்

image

தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் ’கருத்த மச்சான்’ பாடல் உள்பட 2 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தன்னுடைய அனுமதி கோராமல் தனது பாடலை பயன்படுத்தி இருப்பதாக இளையராஜா தரப்பு சென்னை HC-ல் தெரிவித்திருந்தது. சோனி மீதான வழக்கு விசாரணையின் போது இதை அவர்கள் சொன்னதால், Dude-ஐ எதிர்த்து தனியாக வழக்கு தொடரும்படி நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.

News October 22, 2025

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசு பணி

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள Border Roads Organisation-ல் காலியாகவுள்ள 542 மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!