News February 5, 2026

ALERT: Walking போது இதை செய்யாதீர்.. இதயம் பாதிக்கும்

image

ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, ➤மிக வேகமாக நடப்பது ➤வார்ம் – அப் செய்யாமல் நடப்பது ➤நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ➤அதிகமாக சாப்பிட்ட பிறகு நடப்பது ➤மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE.

Similar News

News February 18, 2026

பாஜக தலைவர்கள் பேச்சு: அண்ணாமலை கண்டனம்

image

த்ரிஷா, ஜோதிமணி என அடுத்தடுத்து பெண் பிரபலங்களை பாஜக தலைவர்கள் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தனி மனித விமர்சனத்தை யார் வைத்தாலும் அது ஏற்புடையது அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் <<19161427>>ஜோதிமணி <<>>பற்றி தவறாக பேசிய மாவட்ட செயலாளரிடம் தனது கண்டனங்களை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். மைக்கை பார்த்தவுடன் உணர்ச்சி வசப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News February 18, 2026

சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

image

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். அதை நாம் பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம். உங்களின் தோலின் தன்மையை பொறுத்து வெயிலில் 15-20 நிமிடங்கள் வரை நிற்கலாம்.

News February 18, 2026

எல்லா கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை: GK மணி

image

தேர்தல் நெருங்கும் நிலையில் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. ஆனால், ராமதாஸ் தரப்பு கூட்டணி விவகாரத்தில் இன்னும் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக GK மணி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், இறுதி முடிவை விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!