News December 19, 2024

Alert: மோசடிக்காரர்களின் புது ரூட் இதுதான்..!

image

மோசடிக்காரர்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் போது, நாமும் அப்டேட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுகிறோம் எனக்கூறி தனிப்பட்ட தகவல்களை பெறுவது ஏமாற்றுகாரர்களின் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. இதை உணர்ந்த TRAI, தனிப்பட்ட பயனர்களுக்கு நாங்கள் போன் போட மாட்டோம் எனவும், உஷாராக இருக்கவும் எச்சரித்துள்ளது. உங்களுக்கும் இதுபோன்று போன் வந்துள்ளதா.

Similar News

News July 4, 2025

விபரீதத்தில் முடிந்த பாலியல் ஆர்வம்

image

டெல்லியை சேர்ந்த 27 வயது பெண், அடிவயிற்று வலி, மலம் கழிக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளுடன் ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் சோதித்த போது, மலக்குடலுக்குள் மாய்ஸ்சுரைசர் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் ஆர்வத்தில் உறுப்பில் பாட்டிலை நுழைக்க, அது உள்ளே மாட்டிக் கொண்டதாக பெண் கூறினார். அதன்பின், sigmoidoscopy-யை பயன்படுத்தி பாட்டிலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

News July 4, 2025

பழைய ஓய்வூதிய திட்டம்: விரைவில் குட் நியூஸ்

image

தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதாவது இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

error: Content is protected !!