News August 29, 2025
அலர்ட்.. தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க!
Similar News
News September 2, 2025
வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டில் 6.5% ஆக இருக்கும் என கிரிசில்(Crisil) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 6.5% ஆக இருக்க, 2025-26 முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், ஏற்றுமதியில் பாதித்தாலும், தனியார் நுகர்வு வளர்ச்சி அதிகரிப்பதால் வளர்ச்சி ஏற்றத்தில் இருக்குமாம்.
News September 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 2, ஆவணி 17 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 2, 2025
இந்தியாவில் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026, டெல்லியில் நடைபெறும் என்று உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டில் டெல்லியில் போட்டிகள் நடைபெறும். முன்னதாக கடந்த 2009-ல் ஹைதராபாத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.