News October 23, 2024
ALERT: புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் SEBI

பரஸ்பர நிதி நிறுவனங்களின் நடைமுறை வெளிப்படைத்தன்மையை SEBI புதிய விதிகளை நவ. 1 முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, இனிமேல், எந்தவொரு AMC நிறுவனத்தின் முக்கிய பணியாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் MF யூனிட்களில் ஒரு காலாண்டில் ₹15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 2 நாட்களுக்குள் இணக்க அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாங்கிய யூனிட்களை ஒரு மாதத்திற்குள் (காரணம் தெரிவிக்காமல்) விற்கக்கூடாது.
Similar News
News December 16, 2025
காங்கிரஸில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அன்மையில் நடைபெற்ற பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைப்பது குறித்தே அவர் அலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
News December 16, 2025
SPORTS 360°: Hat-trick வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

*நாளை நடைபெற உள்ள 3-வது ஆஷஸ் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. * U19 ஆசிய கோப்பையில் இன்று இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்ள உள்ளது. *BBL அறிமுக போட்டியில் ஒரே ஓவரில் 2 நோ பால் வீசியதால் ஷஹீன் அப்ரிடி ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். *U19 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.
News December 16, 2025
சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். ஆனால் சூரிய ஒளியை பெற சரியான நேரம் எது என பலருக்கும் தெரியாது. ‘வைட்டமின் டி’ பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம்.


