News September 4, 2025

அலர்ட்: வெளுத்து வாங்கபோகும் கனமழை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், IMD மீண்டும் கனமழை அலர்ட் விடுத்துள்ளது. வரும் 8-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது.

Similar News

News March 15, 2026

நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் புதிய மாற்றம்

image

தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். EPS தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி, வேணுகோபால் Ex MP, ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை MP ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என EPS கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 15, 2026

வங்கி கணக்கில் மேலும் ₹3,000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

image

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ₹12,000-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசாணை வெளியாகியுள்ளது. அதில், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியமும் ₹6,000-ல் இருந்து ₹7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வசதி வாரியத்தில் அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT

News March 15, 2026

தேர்தல் அறிவிப்பு.. ரயில் டிக்கெட்கள் காலி

image

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்களிப்பதற்கு சொந்த ஊர் செல்வதற்காக பலரும் IRCTC-ல் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஏப்.21, ஏப்.22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்கள் கடகடவென காலியாகி வருகின்றன. டிக்கெட் புக் செய்யாதவர்களே முந்துங்க..

error: Content is protected !!