News August 8, 2024
ALERT: இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்கும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News November 5, 2025
நவ.24-ல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 24 அல்லது 25-ம் தேதி தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ECI நடத்தும் SIR நடவடிக்கைகளை கடுமையாக சாடி வரும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்க வரிவிதிப்பும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
News November 5, 2025
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழா

நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு அடுத்து நாடு முழுவதும் பிரபலமானது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’. சுதந்திர போராட்ட காலத்தில் தேச உணர்வூட்டி ஊக்கப்படுத்திய இப்பாடல், இன்றும் உத்வேகம் அளிக்கிறது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. வரும் நவ.7-ல், அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, 1<<18194621>>2-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


