News April 2, 2025
அலர்ட்: இன்று கனமழை

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 16, 2025
3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை ஆஜர்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை <<17374196>>மீரா மிதுன்<<>> நேற்று சென்னை கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு தொடர் மனநல சிகிச்சை தேவைப்படுவதாக அரசு வக்கில் தெரிவிக்க, பிடிவாரன்ட் திரும்ப பெறப்பட்டு, விசாரணை நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த நடிகையின் மனநலம் பாதித்து டெல்லியில் இருப்பதாக அவரது தாயார் கூற, சமீபத்தில் போலீசார் அவரை பிடித்தனர்.
News October 16, 2025
சீனாவிற்கு உளவு பார்த்த இந்திய வம்சாவளி

சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி இந்திய வம்சாவளியும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியுமான ஆஷ்லே டெல்லிஸை (64) FBI கைது செய்துள்ளது. ரகசிய ஆவணங்களுடன், சீன அதிகாரிகளை சந்தித்ததாகவும், அவர்களிடம் இருந்து டெல்லிஸ் பரிசு பெற்றதாகவும் FBI அஃபிடவிட்டில் தெரிவித்துள்ளது. ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் டெல்லிஸ்.
News October 16, 2025
துணியில் விடாப்பிடியான கறையா? இதோ தீர்வு

துணியில் விடாப்பிடியான கறை ஒட்டியிருப்பதால், அணிவதற்கு சங்கடப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை கொண்டே தீர்வு காணலாம். டீ, காபி, இங்க், சாஸ், லிப்ஸ்டிக் உள்ளிட்ட எந்த கறையாக இருந்தாலும் அவற்றுக்கு குட்பை சொல்ல முடியும். துணி துவைக்கும் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க..