News September 28, 2024
ALERT: கனமழை கொட்டித்தீர்க்கும்

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும், கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளையும், நீலகிரி, விருதுநகர், நெல்லை, குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News December 6, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 6, 2025
45 வயது முதல் இனி பெண்களுக்கு Lower berth!

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ரயிலில் Lower Berth இருந்தால், அது தானாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், முன்பதிவில் கேட்காவிட்டாலும், Quota அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
News December 6, 2025
அமெரிக்காவில் தடுப்பூசியில் புதிய சர்ச்சை!

கல்லீரலை தாக்கும் Hepatitis B வைரஸுக்கான தடுப்பூசி, WHO பரிந்துரைப்படி இந்தியா உள்பட பல நாடுகளிலும், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போடப்படுகிறது. ஆனால், USA-வில் தாய்க்கு தொற்று இருந்தால் மட்டுமே தடுப்பூசி அவசியம். இல்லையெனில் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


