News October 25, 2024
ALERT: இங்கெல்லாம் கனமழை வெளுக்கப்போகுது

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
Similar News
News January 14, 2026
அறுவடை திருநாளை அன்புடன் வரவேற்போம் ❤️❤️

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையை வரவேற்கும் திருநாளாக போகி பண்டிகை உள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலுமாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இத்திருநாளில், பழைய துன்பங்கள் நீங்கி, புதிய தொடக்கத்தை தொடங்க Way2News வாசகர்களை வாழ்த்துகிறோம். அறுவடை திருநாளின் ஆரம்ப நாளில் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் பொங்கும் பொங்கலை வரவேற்போமாக.
News January 14, 2026
IND vs NZ: இன்று த்ரில்லுக்கு பஞ்சமிருக்காது!

இந்தியா Vs நியூசிலாந்து இடையே 2-வது ODI போட்டி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இன்றைய போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும். தொடரை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் நியூசிலாந்து இன்று கடுமையாக போராடும். எனவே பரபரப்பான ஆட்டத்திற்கு பஞ்சமிருக்காது. எந்த அணி வெல்லும் என நினைக்கிறீங்க கமெண்ட் பண்ணுங்க.
News January 14, 2026
தெருநாய்களை கொல்வதாக தேர்தல் வாக்குறுதி!

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


