News August 6, 2024

Alert: இன்று 9 மாவட்டங்களில் கனமழை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நாளை அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News March 24, 2026

ரேஷன் கார்டுகளுக்கு.. இரவில் இனிப்பான அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ₹1,000 பரிசுத்தொகை அளிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.

News March 24, 2026

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது வடகொரியா

image

தென் கொரியாவை நிரந்தர எதிரியாக அறிவித்த கிம் ஜாங் உன், வட கொரியாவில் அணு ஆயுத திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக அணு ஆயுதக் குறைப்பை முன்வைத்த US-ன் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் வட கொரியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தயக்கமின்றி, இரக்கமின்றி எதிர்கொள்வோம் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

News March 24, 2026

மாதம் ₹3,000.. வெளியானது அறிவிப்பு!

image

60 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ₹3,000 ஓய்வூதியம் பெறும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM). இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும், மாத வருமானம் ₹15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தகுதியுடையவர் என்றால் இந்த <>மந்தன் இணையதளம்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!