News October 25, 2024
ALERT: 19 மாவட்டங்களில் இன்று கனமழை

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையத்தால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, திருச்சியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
Similar News
News January 18, 2026
100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய மாருதி திட்டம்

மாருதி சுசுகி நிறுவனம் தனது Vitara மாடல் காரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. Vitara உலக சந்தையில் Across என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக 450 கார்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விட்டாரா காரின் விலை ரூ. 10.50 லட்சம் முதல் ரூ. 19.98 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.
News January 18, 2026
தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்ற RCB

WPL-லில் RCB-க்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடி DC 166 ரன்களை எடுத்தது. அந்த அணியில், ஷபாலி (62) மற்றும் லூசி(36) சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய RCB அணியில், கேப்டன் ஸ்மிருதி அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். இதனால் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை RCB பதிவுசெய்தது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் அந்த அணி உள்ளது.
News January 18, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப்!

இங்கி., பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டென்மார்க் & ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக எந்த வரியையும் விதிக்கவில்லை என்றும், இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் எட்டப்படும் வரை வரும் பிப்.1 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.


