News March 28, 2025
ALERT: நடைப்பயிற்சியின் போது இதைச் செய்யாதீர்

ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, *மிக வேகமாக நடப்பது *வார்ம் – அப் செய்யாமல் நடப்பது *குனிந்து நடப்பது *நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது *அதிகமாக சாப்பிடுவது *மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 15, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? வந்தது அப்டேட்

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறைவிட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க வெள்ளி, செவ்வாய் அன்றும் சேர்த்து 5 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.
News October 15, 2025
வேட்பு மனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்!

பிஹார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தேஜஸ்வி யாதவ் தந்தை லாலு பிரசாத்துடன் வந்து ரகோபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 1995ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியை அமைத்துள்ளன.
News October 15, 2025
₹35,400 சம்பளம்: 2,570 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 (மாறுதலுக்கு உட்பட்டது) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது: 18- 33. ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் நவம்பர் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <