News April 30, 2025
ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.
Similar News
News November 26, 2025
முதுமலை பகுதியில் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கார்குடி பகுதிக்குட்பட்ட கிரஸ்கட் கண்காணிப்பு கோபுரம் பகுதியில் நேற்று பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இன்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் துணை இயக்குநர் உதகை கோட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனஉயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினன் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
News November 26, 2025
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
கர்நாடக CM ரேஸில் நியூ என்ட்ரியா?

கர்நாடக CM யார் என சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ரேஸில் மேலும் ஒருவர் இணைந்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் CM ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியதால், அன்றிலிருந்து இன்றுவரை தான் எப்போதும் CM ரேஸில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


