News April 19, 2024
ALERT: வாக்காளர் பெருமக்களே !

இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டு விதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இது என்பதை அழுத்தமாக உங்கள் மனதில் வையுங்கள். ஜனநாயகத்தைக் காக்க இன்று ஒருநாள் நேரத்தை வாக்குச்சாவடியில் செலவிடுங்கள். அடையாள அட்டையோடு செல்லுங்கள். வாக்கு செலுத்தும்போது, வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தெளிவாக பாருங்கள். நீங்கள் வாக்களிக்கும் சின்னம்தான் ‘விவிபேட்’ இயந்திரத்திலும் காட்டுகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
Similar News
News August 17, 2025
டீ கடை முதல் சாம்பியன் வரை.. என்ன ஒரு Inspiration!

ப்ரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணியை சாம்பியன் ஆக்கிய கேப்டன் அஸ்லாம் இனாம்தார், தனது கடந்த காலத்தை பகிர்ந்துள்ளார். வீட்டில் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதால், டீக்கடையில் எச்சில் கிளாஸை கழுவுவதில் தொடங்கி அனைத்து பணிகளையும் செய்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காத்திருப்பு, சுய ஒழுக்கம், கடின உழைப்பு தான் ஒருவரை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
‘பாமகவில் பிளவை ஏற்படுத்தினார் அன்புமணி’

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் GK மணி வாசித்தார். அதில், கட்சியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அன்புமணி செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. சமரச பேச்சுவார்த்தையை ராமதாஸ் ஏற்றுக்கொண்டாலும், அன்புமணி ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. டிவி சேனல், பசுமை தாயகம் அமைப்பை அன்புமணி அபகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 17, 2025
படம் எடுக்கலாமா?… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் ஆக.20-ல் தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், ‘மரங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!