News December 13, 2024

ALERT: திறந்து விடப்படும் சென்னை ஏரிகள்

image

கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 6,500 கன அடியாக இருப்பதால் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

வான்கடேவில் தோனி-சாக்‌ஷி தம்பதி!

image

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை Ex. கேப்டன் தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் கண்டுகளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தில் இருவரும் பங்கேற்ற நிலையில் ஜோடியாக வான்கடேவுக்கு சென்றுள்ளனர். அதே போன்று ரோகித் சர்மா உள்ளிட்ட பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.

News March 5, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயில் விசேஷம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை, பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT

News March 5, 2026

BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

image

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.

error: Content is protected !!