News December 7, 2024
ALERT: சிசேரியன் டெலிவரியா… தம்பதியரே இதை கவனிங்க

இயற்கை பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனைகள், சீரணம் தொடர்பான கடுமையான பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய – அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் 3.2% சிசேரியன் குழந்தைகளுக்கு மேற்கண்ட நோய்கள் உள்ளது. இதனால் குழந்தைகளின் இறப்பு வீதமும் அதிகரிக்கிறது. ஆகவே, மருத்துவரிடம் நன்கு ஆலோசித்த பிறகு முடிவு எடுங்கள்.
Similar News
News March 8, 2026
காமெடி நடிகர் கோரி பார்கர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Love Boat’, ‘Will & Grace’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் கோரி பார்க்கர்(60) காலமானார். நடிப்பு மட்டுமின்றி மேடை நாடகத்திலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வந்த கோரி பார்க்கர், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக திரைப்பிரபலங்கள் பலரும் கேன்சர் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். So sad!
News March 8, 2026
காங்கிரசுக்காக தமிழகத்தை அடமானம் வைத்த திமுக

கூட்டணிக்குள் காங்கிரஸை தக்க வைக்க திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். காங்., – திமுக தொகுதி உடன்பாடு கையெழுத்தான மறுநாளே விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை CM ஸ்டாலின் ஏன் கண்டிக்கைவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 8, 2026
உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.


