News April 17, 2024
ALERT: 2 நாள்கள் உஷாரா இருங்க

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியத்தை உணருவார்கள் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
க.பொன்முடி வெளியே.. கௌதம சிகாமணி உள்ளே?

2026-ல் பொன்முடியை கழட்டிவிடும் முடிவில் இருக்கிறதாம் திமுக. சர்ச்சை பேச்சால் கட்சிப் பதவியை இழந்தவர், இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கிறார். இந்நிலையில், பொன்முடிக்கு பதிலாக 2026-ல் அவருடைய மகன் கௌதம் சிகாமணி திருக்கோயிலூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்கிறார்கள். இதனால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லையாம். எதிர் கோஷ்டிகளை மகனை கொண்டு சமாளிப்பாரா பொன்முடி?
News April 30, 2025
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். Invercargill நகரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சமீப காலமாக இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
News April 30, 2025
மோடியின் திட்டம் இதுதான்..ராணுவ நிபுணர்கள்

J&K தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு PM மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ள நிலையில், இந்தியா முழு அளவிலான போரில் இறங்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர். போர் என்றால் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்றும், சிறு அளவிலான தாக்குதல்கள், ஸ்ட்ரைக்குகள் என்ற அளவிலேயே பதிலடி இருக்கும் என்கின்றனர். கடற்படை, விமானப்படையை விட ராணுவமே தாக்குதலில் பெரும்பங்கு வகிக்கும் என்கின்றனர். உங்க கருத்தென்ன?