News October 16, 2025

ALERT: செங்கல்பட்டில் கனமழை பெய்யும்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News October 16, 2025

செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அக்டோபர் 17 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: அச்சரப்பாக்கத்தில் ஜெயலட்சுமி திருமண மண்டபத்திலும், மதுராந்தகத்தில் அரசு நடுநிலைப் பள்ளியிலும், பரங்கி மலையில் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்திலும், காட்டாங்குளத்தூரில் என் ஆர் தனபால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்கள் மனுக்களை அளித்த்து பயன்பெறலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

செங்கை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா’<<>> ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

நீச்சல் போட்டியில் அசத்தல்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, வேளச்சேரியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (அக்.14) நடந்த நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த நிதிக் நாதெல்லா 100 மீட்டர் பேக் ஸ்டோர்க் போட்டி, கவீன்ராஜ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டி, யாதேஷ்பாபு 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கங்களை வென்றனர்.

error: Content is protected !!