News December 22, 2025

ALERT: குழந்தைகளின் ஆதாரை அப்டேட் செய்துவிட்டீர்களா?

image

குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்வது கட்டாயம் என UIDAI தெரிவித்துள்ளது. பள்ளி அட்மிஷன், அரசு திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க 5 -15 வயது குழந்தைகளின் கைரேகை, போட்டோக்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவை 2026 செப்டம்பர் 30 வரை இலவசம் என்றும் கூறியுள்ளது. எனவே, பெற்றோர்களே உடனே அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுங்கள்.

Similar News

News January 1, 2026

கோலிவுட்டும்.. நியூ இயர் புது போஸ்டர்ஸும்!

image

2026 புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களை வாழ்த்த பல படங்களின் First Look & ஸ்பெஷல் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அப்படி வெளிவந்து வைரலாகியுள்ள படங்களின் போஸ்டர்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. இதில், உங்களை அதிகம் கவர்ந்தது எது?

News January 1, 2026

மானத்தை விட்டுட்டு விஜய் கூட்டணிக்கு போறதா? திருமா

image

திமுகவிடம் சண்டை போட்டு கூடுதல் ‘சீட்’ கேட்போமே தவிர, கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என திருமா கூறியுள்ளார். மக்கள் ஆதரவு விஜய்க்கு இருப்பதால் திமுக கூட்டணி தோற்றுவிடும் என பலர் சொல்வதாக குறிப்பிட்ட அவர், தோற்றுவிடுவோம் என்பதற்காக மானத்தை விட்டுவிட்டு தவெக கூட்டணியில் இணைய முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

புத்தாண்டில் வந்த சோகம்.. 128 பேர் பலி!

image

2025-ல் உலகளவில் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(IFJ) கவலை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இஸ்ரேல்-பாஸ்தீனப் போரில் மட்டும் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தற்போது உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். இதுவெறும் புள்ளிவிவரம் அல்ல, இது நமது சக ஊழியர்களுக்கான உலகளாவிய அபாய எச்சரிக்கை என IFJ தெரிவித்துள்ளது.

error: Content is protected !!