News January 13, 2026

ALERT: இதை டயல் செய்யாதீங்க

image

USSD அடிப்படையிலான Call Forwarding மோசடி குறித்து இந்திய சைபர் கிரைம் பிரிவு (I4C) எச்சரித்துள்ளது. டெலிவரி முகவர்கள் போல் நடித்து, 21, 61, 67 எனத் தொடங்கும் USSD குறியீடு எண்களை டயல் செய்ய பரிந்துரைப்பர். நீங்கள் டயல் செய்தால், OTP-கள், வங்கி அழைப்புகள், verification அழைப்புகள் ஆகியவை மோசடிக்காரரிடம் செல்லும். Call forwarding-ஐ உடனே நிறுத்த ##002# டயல் செய்யுங்கள். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 27, 2026

கல்விக்கடன் ரத்து: திமுகவை சாடிய ராமதாஸ்

image

சில நாள்களாக திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறாமல் இருந்த ராமதாஸ், தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு, கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். வருங்காலங்களில் திமுக வாக்குறுதிகள் கொடுக்கும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News January 27, 2026

மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. புதிய தகவல்

image

தேர்தல் நெருங்குவதால், மகளிர் வாக்குகளை பெற திமுக, அதிமுக முனைப்பு காட்டுகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என EPS அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து CM ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தஞ்சையில் பேசிய ஸ்டாலின், <<18967001>>தேர்தலில் பெண்களை நம்பியே இருக்கிறேன்<<>> என கூறியிருந்தார்.

News January 27, 2026

திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும்: அன்புமணி

image

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித் தந்ததே திமுகவின் சாதனை என அன்புமணி சாடியுள்ளார். தனது அறிக்கையில், அண்ணா பல்கலை., மாணவி விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கணக்கு தீர்க்க மக்கள் தயாராக உள்ளதாகவும், தேர்தலில் DMK கூட்டணி மண்ணைக் கவ்வும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!