News April 5, 2024

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட மது விற்பனை!

image

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச்சில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

Similar News

News April 7, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 6 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News April 7, 2026

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

image

நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைப்போ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.

error: Content is protected !!